May 1, 2025 16:07:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் 10 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு நேர ஊரடங்கு அமுல்படுத்த உத்தரவு

தமிழகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு நேர ஊரடங்கு அமுல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

காய்கறி, மளிகை, தேநீர் கடைகளை நன்பகல் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, உணவகங்களில் உணவுப் பொதிகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனையகங்கள், அழகு சாதன நிலையங்கள் மற்றும் முடி வெட்டும் நிலையங்களை முழுமையாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.