March 11, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் ஒரேநாளில் 24,878 பேருக்கு கொரோனா; 195பேர் உயிரிழப்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் வீச்சு அதிகமாகிவரும் சூழ்நிலையில்,தமிழகத்தில் வியாழக்கிழமை மேலும் 24,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 21,546 பேர் குணமடைந்துள்ளனர்.இதன் மூலம் மொத்தம் 11,51,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் 114 பேரும், தனியார் மருத்துவமனையில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர்.