November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக அமைச்சரவை நாளை பதவியேற்கிறது: அமைச்சர்களின் விபரங்கள் வெளியாகின

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள அதேவேளை அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

திமுக அரசின் அமைச்சுப் பட்டியல் தமிழக ஆளுநரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் விபரங்கள் ஆளுநர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நாளை காலை 9 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

அமைச்சர்களாக பதவியேற்க உள்ளோர் விபரங்கள்

1. மு.க.ஸ்டாலின் முதல்வர் – பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்

2. துரைமுருகன் – நீர்வளத்துறை

3. கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை

4. பெரியசாமி – கூட்டுறவுத்துறை

5. பொன்முடி – உயர்கல்வித்துறை

6. எ.வ.வேலு – பொதுப்பணித்துறை

7. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத் துறை

8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

9. தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை

10. எஸ்.ரகுபதி – சட்டத்துறை

11. முத்துசாமி – வீட்டுவசதித்துறை

12. பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை

13. தா.மோ.அன்பரசன் – ஊரக தொழில்துறை

14. சாமிநாதன் – செய்தி, விளம்பரத்துறை

15. கீதாஜீவன் – சமூக நலன், மகளிர், குழந்தைகள் நலத்துறை

16. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை

17. ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை

18. ராமச்சந்திரன் – வனத்துறை

19. சக்ரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை

20. செந்தில் பாலாஜி = மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மைச்சர்

21. ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை

22. சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை

23. பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை

24. எஸ்.எஸ்.சிவசங்கர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

25. பழனிவேல் தியாகராஜன்- நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை

26. ஆவடி நாசர் – பால்வளத்துறை

27. செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

28. அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை

29. மெய்யநாதன் – சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

30. சிவி கணேசன் – தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை

31. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை

32. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை

33. கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை

34. சேகர் பாபு – இந்துசமய அறநிலையத்துறை