May 1, 2025 18:11:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் 4 இலட்சத்தை தாண்டியுள்ளதுடன், பலி எண்ணிக்கை 4,000 ஐ எட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிதாக 4,12,262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 3,980 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,29,113 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,80,844 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 35,66,398 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், நாட்டில் இதுவரை 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.