January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனா தொற்றால் காலமானார்

சேரனின் ஆட்டோகிராப் திரைப்படத்தில் வெளியான ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் மூலம் பிரபலமான மாற்றுத்திறனாளியான பாடகர் கோமகன் காலாமானார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சென்னை அரச மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோகிராப் திரைப்படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலால் ஏற்பட்ட புகழை தொடர்ந்து அவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார்.

அத்துடன் மாற்றுத்திரனாளிகளை கொண்ட இசைக் குழுவொன்றையும் நடத்திவந்த கோமகன் தமிழக அரசின் கலைமாமனி விருதையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை மரணித்த செய்தியறிந்து இயக்குனர் சேரன் உள்ளிட்ட பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.