இந்திய பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் தேமிய அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் இந்திய பயணிகளை அனுமதிக்க வேண்டாம் எனத் தெரிவித்து, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கும் அவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, இந்த உடனடி பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுகாதாரத் துறையின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த பயணக் கட்டுப்பாடு மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.