April 29, 2025 13:26:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபல நகைச்சுவை – குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான பாண்டு காலமானார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பாண்டு, நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். இவரின் இறப்பு தமிழ் திரைத்துறையினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.