January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று: ஜீ 7 மாநாட்டுக்காக சென்ற இந்திய தூதுக்குழு பிரிட்டனில் தனிமைப்படுத்தப்பட்டது

பிரிட்டனில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற இந்திய தூதுக்குழு காட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் பிரிட்டனுக்குச் சென்ற இந்திய தூதுக்குழுவில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்திய தூதுக்குழு சுய தனிமைப்படுத்தலில் உள்ளதோடு, மாநாட்டில் இணைய வழியில் இணைந்துகொண்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் பிரீத்தி பட்டேல் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.

ஏனைய அனைத்து சந்திப்புகளும் கூட்டங்களும் இணைய வழியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா ஜீ 7 உறுப்பு நாடாக இல்லாத போதும், இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.