தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க நாளைய தினம் ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரவுள்ளார்.
அதற்கமைய நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து மே 7 ஆம் திகதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார்.
பதவி ஏற்பு விழாவில் 200 பேர் வரையிலானோருக்கே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது.
பத்து வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க உள்ளதுடன் இதில் முதல் முறையாக மு க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளை விடவும் அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.