தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்கு சதவீதங்கள் தொடர்பான விபரங்கள் தேர்தல்கள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
234 தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக 133 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திமுகவுடன் கூட்டணியாக போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களிலும், மாதிமுக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும், சிபிஎம் 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன
இதேவேளை அதிமுக 66 இடங்களில் வென்றுள்ளதுடன், அதனுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிட்ட பாஜக 4 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதன்படி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் பெற்றுகொண்ட வாக்குகள் மற்றும் வாக்கு சதவீதங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று மாலை தேர்தல்கள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகளுக்கமைய தமிழகத்தில் உள்ள 6.28 கோடி வாக்காளர்களில் சட்டமன்றத் தேர்தலில் 4.57 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் திமுக ஒரு கோடியே 74 லட்சத்து 30 ஆயிரத்து 100 வாக்குகளை பெற்றுள்ளது. இது 37.70 சதவீத வாக்குகளாகும்.
அதிமுக ஒரு கோடியே 53 லட்சத்து 90 ஆயிரத்து 974 வாக்குகளை பெற்றுள்ளது. இது 33.29 சதவீத வாக்குகளாகும்.
பாமக 17 லட்சத்து 58 ஆயிரத்து 774 வாக்குகளை பெற்றுள்ளது. இது 3.80 சதவீத வாக்குகளாகும்.
பாஜக 12 லட்சத்து 13 ஆயிரத்து 510 வாக்குகளை பெற்றுள்ளது. இது 2.62 சதவீத வாக்குகளாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 லட்சத்து 4 ஆயிரத்து 537 வாக்குகளை பெற்றுள்ளது. இது 1.09 சதவீத வாக்குகளாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 லட்சத்து 90 ஆயிரத்து 819 வாக்குகளை பெற்றுள்ளது. இது 0.85 சதவீத வாக்குகளாகும்.
தேமுதக 2 லட்சத்து 156 வாக்குகளை பெற்றுள்ளது. இது 0.43 சதவீத வாக்குகளாகும்.
காங்கிரஸ் -19 லட்சத்து 76 ஆயிரத்து 527 வாக்குகளை பெற்றுள்ளது. இது 4.3 சதவீத வாக்குகளாகும்.
ஐயுஎம்எல். 2 லட்சத்து 22 ஆயிரத்து 263 வாக்குகளை பெற்றுள்ளது. இது 0.48 சதவீத வாக்குகளாகும்.
மக்கள் நீதி மய்யம் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 847 வாக்குகளை பெற்றுள்ளது. இது 2.45 சதவீதமாகும். அத்துடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2.47 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
இதேவேளை இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கவில்லை என்ற நோட்டாவிற்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 538 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்த வாக்கு எண்ணிக்கையில் 0.75 சதவீதமாகும்.