May 1, 2025 16:28:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

எதிர்வரும் 6 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மளிகை, காய்கறி கடைகள் தவிர பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், டீ கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது

ஊரக பகுதிகளிலுள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.