சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது முலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முதல்வர் பதவியை இராஜினாமா செய்த கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பியுள்ளார்.
மேலும் முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளையும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 3, 2021
இதேவேளை அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழினிசாமியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.