January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வாழ்த்துகள்; ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள்.தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்ளிட்ட பலர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெருவெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள்.நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள்.சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல.அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு.மண்,மொழி,மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..