January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்; அமித் ஷா

தமிழக மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் டுவீட் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ள நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க தலைவருக்கும் கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில் ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தற்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழு மனதோடு சேவை ஆற்றியுள்ளது. அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு, பாரத பிரதமர் நரேந்திர மோடி
தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர, சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன் என அமித்ஷா அந்த பதிவில் பதிவிட்டிருக்கிறார்.