February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் பூட்டப்பட்டது

photo:ITBP_twitter

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,உடனடியாக அமுலாகும் வகையில் புதுச்சேரியில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, புதுச்சேரியில் உள்ள மது,சாராய, கள் கடைகள், உணவகங்கள் என அனைத்து விதமான மதுக்கடைகளும் வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.