January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 20 பேர் உயிரிழப்பு

டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துவிடும் என்பதால், 200 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கும் குறைவான ஒக்ஜிஜன் மட்டுமே உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

காலை 10 மணிக்கு வருவதாக இருந்த ஒக்சிஜன் இன்னும் வரவில்லை எனவும் அவசரமாக உதவி தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.