
அவசரமாக ஒக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான அளவில் ஒக்சிஜன் இருப்பதாக உருக்கமான பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 2023 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.நாட்டில் கொரோனாவிற்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,82553 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,95,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர்.