June 16, 2025 14:26:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராகுல்காந்தி விரைவில் குணமடைய வேண்டுமென இந்திய பிரதமர் பிரார்த்தனை

மக்களவை எம்.பி.யும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராகுல்காந்தி விரைவில் குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

குறித்த பதிவில், மக்களவை எம்.பி. ராகுல்காந்தி பூரண உடல்நலத்துடன், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரண்தீப் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் , சந்திரசேகர் ராவ் ஆகிய அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.