February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்த்துக்கொள்ளவும்’: அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா, அதன் குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகளுக்கும் இந்தியாவில் பரவும் புதிய வகை கொரோனா தொற்றும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தால், பயணிகள் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டு, அனைத்து விதமான சுகாதார ஒழுங்குகளையும் பேணி, பயணிக்குமாறும் அமெரிக்க கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா இதுவரையில் ’34 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்’ என அதன் குடிமக்களுக்கு கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.