
நடிகர் விவேக்கின் உடல் அக்கினியுடன் சங்கமமானது.
விருகம்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்த ரசிகர்கள் மரக்கன்றுகளுடன் குவிந்தனர்.
விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் வகையில் அரச மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விவேக் இறப்புக்கும், அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.