June 1, 2025 6:21:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் விவேக்கின் இறுதிக் கிரியை காவல்துறை மரியாதையுடன் நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு

(Photo:@agam_justin/Twitter)

நடிகர் விவேக்கின் இறுதிக் கிரியை காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடிகர் விவேக்கின் உடலை அரச மரியாதையுடன் தகனம் செய்ய அனுமதி கோரி, தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்தே, விவேக்கின் இறுதிக் கிரியை காவல்துறை மரியாதையுடன் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிகள் அமுலில் உள்ளதால், அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியிருந்தது.

இன்று விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க, தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரின் கலை மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் முகமாகவே காவல்துறை மரியாதை செலுத்தப்படவுள்ளது.