June 11, 2025 20:30:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சின்னக் கலைவாணர் பத்மஶ்ரீ விவேக் காலமானார்

மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் விவேக் நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தனது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்தவர் என்பதுடன், தொடர்ந்தும் படங்களில் நடித்து வந்தார்.