
இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால், நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை,அவற்றின் கடமையை தவறாமல் செய்து வருகிறது.கொரோனா வினால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படவே, செயற்கை சுவாசம் அதாவது ஒக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
ஆகவே இந்த ஒக்ஸிஜன் தயாரிப்பை இரு மடங்காக உயர்த்தி ,24 மணிநேரமும் ஒக்ஸிஜன் உற்பத்தி செய்ய, ஆலைகளை இயக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் .
இதேபோல இந்த ஒக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல தேவையான டேங்கர் லாரிகளை பயன்படுத்தவும்,நைட்ரஜன் வாயு கொண்டு செல்லும் லாரிகளை ஒக்சிஜன் கொண்டு செல்ல, அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவேக்சின் தடுப்பு மருந்து உற்பத்தியை இரண்டு மடங்கு உயர்த்தியும், அதற்கு நிதி சலுகை அளித்தும், அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதிலும் 117 மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பேச உள்ளார்.
இதில் மாநிலங்களுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்துகள், கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் மருந்துகள், ஒக்சிஜன் மற்றும் திரும்பவும் நாடு தழுவிய அளவில் லொக் டவுன் போன்ற விடயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.