கொரோனாவை இயற்கை பேரழிவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தின் மூலம் பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில பேரழிவு நிதியில் இருந்து செலவு செய்ய முடியும் என உத்தவ் தாக்கரே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கொரோனாவை இயற்கை பேரழிவாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து தமிழகத்தில் பல கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.