photo-COVID-19 Control Room, Maharashtra_twitter
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் நாளை (புதன்கிழமை) இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு அனைத்து அலுவலகங்களும் மூடப்படும் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ரயில், பேருந்து சேவை தொடரும் எனவும்,அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும்,மக்கள் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளலாம் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.