(Photo : Twitter/Senthil)
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தோன்றியதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, செந்திலின் மனைவி, மகன், மருமகள் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் செந்தில் மற்றும் அவரின் குடும்பத்தினர் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.