November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்வதற்கு தடை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வகுப்புவாத அடிப்படையில் வாக்குகளை சேகரிக்க முயற்சித்ததாக கூறி தேர்தல் ஆணையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்வதற்கு அவருக்கு தடை விதித்துள்ளது .

மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் வாக்குகளைப் பெற மத ரீதியாகப் பேசியதாகவும், மத்திய படைகளுக்கு எதிராக வாக்காளர்களை தூண்டியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியதாக தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

மார்ச் மாதம் 28 ,ஏப்ரல் 7 ஆம் திகதியன்று மம்தா பானர்ஜி பேசியது குறித்து இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஜனநாயக விரோதமானது,அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டது என மம்தா பானர்ஜி விமர்சித்து டுவிட் செய்துள்ளார் .