November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவசர கால பயன்பாட்டுக்கு ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இந்தியா ஒப்புதல்

(Photo : Twitter /@sputnikvaccine)

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய அரசாங்கத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ரெட்டிஸ் லேப் நிறுவனம், தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரியதுடன், இதற்கான பரிசோதனையை முன்னெடுத்து வந்தது.

இந்த நிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஆய்வு செய்த நிபுணர் குழு அவசரகால தேவைக்கு பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது

இதற்கமைய மத்திய அரசு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கும் பட்சத்தில் 3 வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்கட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16ம் திகதி முதல் மக்களுக்கு பல கட்டங்களாக போடப்பட்டு வருகின்றன.

ஸ்புட்னிக்-வி  தடுப்பூசியின் 850 மில்லியன் டோஸ்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6 சதவீத செயல் திறன் கொண்டது என பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.