டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மருத்துவமனையில் இருந்து இன்றைய தினம் தனது மாளிகைக்கு திரும்பியுள்ளார்.
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அண்மையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மார்ச் 27ஆம் திகதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர் பரிசோதனைகளுக்குப் பின்னர் குடியரசுத் தலைவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
பின்னர் 30 ஆம் திகதி காலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வந்த குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீரானதை அடுத்து அவர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு திரும்பியுள்ளார்.