தமிழகத்தில் ஒரே நாளில் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மக்கள் கூட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி வரை வழிபடலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது
வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களை தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி திரையிடலாம்.
புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த எண்ணிக்கை 9,26,816 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,952 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,76,257 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று (சனிக்கிழமை) மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,886 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் 1752 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 2,61,072பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை 2,04,31,588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) மட்டும் 84,546 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைக்கு (சனிக்கிழமை )மட்டும் 2,337 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,67,294 பேர் பெண்கள் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.