(File Photo)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்கவில்லையென்றால் இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வருகிறது.
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனா அதிகரித்தால் இரவு நேர ஊரடங்கு அமுல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்றுப் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்த கொரோனா தொற்று இரண்டாவது அலையை சமாளிக்க, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.