
கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாததால்தான் கொரோனாவின் 2ம் அலை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.
மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாகவும் பிரதமர் மோடி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும்
கொரோனா சூழலை சமாளிக்க பரிந்துரைகளை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாததால்தான் கொரோனாவின் 2ம் அலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.