July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு இருக்கிறது”; இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக , தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் வல்லமை சீனாவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளி மூலமான  கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், சீனா புதிய தொழில் நுட்பங்களுக்கு அதிக நிதி முதலீடு செய்வதாகவும் கூறியுள்ளார்.

சீனா தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவதால் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் சக்தி அந்த நாட்டுக்கு இருக்கிறது.

அவ்வாறு நடந்தால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு தற்போது முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார் .