July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தாக்கம்: புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

(Photo:Dhivya Marunthiah/Twitter)

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதற்கமைய பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஏப்ரல் 10 ஆம் திகதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தேநீர் கடை மற்றும் உணவகங்களில் 50 சதவீதத்தவர்களுக்கே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை திருமண விழாக்களில் 100 பேர் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படவேண்டும் என்பதோடு, முச்சக்கர்வண்டிகளில் ஓட்டுநர் தவிர இரண்டு பேர் அமர்ந்து செல்லலாமெனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.