January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸை பிரதமர் மோடி போட்டுக்கொண்டார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் முதலாவது தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிரதமர், தற்போது இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதுடன், இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் விரைந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, மோடி தனது டுவிட்டர் பதிவில், ‛என் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன்.

வைரஸை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1379974475278557187