July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு பதிவு செய்த முக்கிய அரசியல் பிரமுகர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் என பலரும் மும்முரமாக வாக்குப்பதிவில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், சிலுவம் பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாக்களித்தார்.

சென்னை ,தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனர்.

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான குஷ்பு வாக்களித்தார்.

அத்தோடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்களிப்பு மையத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது மகள்களுடன் வந்து வாக்களித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட குடும்பத்தினர் வாக்களித்தனர்.

தென்காசி சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்தார்.

கோவை மாவட்டம் காமராஜர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் வேட்பாளருமான வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

இதனிடையே, புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி, கதிட்ரல் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார்.

This slideshow requires JavaScript.