(Photo: Election Commission of India/Twitter)
சட்டமன்றத் தேர்தல் இடம்பெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்கள் அதிக அளவில் வாக்களித்து, ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றையதினம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் முதல் கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாகவும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகின்றது.
அதற்கமைய, இந்த தேர்தல் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் தளத்தினூடாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதன்போது, ‘தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
அத்தோடு தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்’ எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.
அதேபோல் கேரளா, ‘அசாம், மேற்கு வங்க மாநில மக்களும் குறிப்பாக இளம் தலைமுறையினரும் வாக்களிக்க முன்வரவேண்டும்’ எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Elections are taking place in Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal. I request the people in these places to vote in record numbers, particularly the young voters.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 6, 2021