July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டமன்றத் தேர்தல்: குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த சினிமா பிரபலங்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றையதினம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதற்கமைய சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள்.

அதேநேரம் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்ததுடன் கமல்ஹாஸன், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன், விக்ரம், தனுஷ், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் தங்களுடைய வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

இதில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக காலை 6:30 மணிக்கு அஜித் வாக்குச்சாவடி வந்து காத்திருந்து முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை நடிகர் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் தொலைபேசியை பிடுங்கி வைத்துவிட்டு சற்றுநேரத்திற்கு பின் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.