July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல்:சைக்கிளில் வாக்களிக்க வந்த நடிகர் விஜய் 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்துள்ளார்.

இன்று நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் வாக்களிப்பார் என்று தகவல் வெளியான நிலையில் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் பலரும் வாக்குச்சாவடியில் காத்திருந்தனர்.

எனினும் யாருமே எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்து சைக்கிளில் வந்தார் விஜய். இதைச் சற்று எதிர்பாராத ரசிகர்கள், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார்கள்.

அதேநேரம் சில காவல்துறையினரும் விஜய்யின் பாதுகாப்புக்கு உடன் வந்தார்கள். ஒரு கட்டத்தில் சைக்கிள் பயணத்தை பின் தொடர்பவர்களின் கூட்டம் அதிகரிக்கவே, விஜய் வேகமாக சைக்கிளை ஓட்டியதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதேவேளை இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை காட்டும் வகையில் அவர் சைக்கிளில் சென்று வாக்களித்தார். என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.