மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள்,மோல்கள்,மதுபான விடுதிகள்,உணவு விடுதிகள் போன்றன மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.பகல் நேரத்தில் 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம்.அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் இயங்க தடையில்லை.அதேசமயம் போதிய கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பொதுப் போக்குவரத்து செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற வேண்டும்.அத்தியாவசிய தேவை உள்ள ஊழியர்கள் மட்டுமே அனுமதி பெற்று வர வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது
கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில்,தற்போது தமிழகம்,கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது என கூறப்படுகிறது.
இதனை அடுத்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுளை தீவிரப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.