தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது.
முதல்வர் பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஓ.பி.எஸ்,சீமான், கமல்,விஜயகாந்த். தினகரன் ஆகியோர் தத்தமது தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் களம் இறங்கியுள்ளன. இரண்டு கட்சிகளிலும் புதிய தலைவர்கள் போட்டியிடுகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவையின் 16 வது தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
தி.மு.க தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க, இடதுசாரிகள், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், ம.ம.க, ம.ஜ.க, கொ.ம.தே.க, த.வா.க உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
அ.ம.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, ஒ.வை.சி கட்சிகள் இணைந்து கூட்டணியாக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்கின்றன.
ம.நீ.ம, சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே இணைந்து கூட்டணியாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரவர் சொந்தத் தொகுதியில் இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தை நடத்தி முடித்துள்ளனர்.