தேர்தல் பிரசார காலம் முடிந்த பின்னர் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்த விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாளை இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது எனவும் இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும், வேறு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களை கவர்கின்ற வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.