February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தி.மு.க எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று

(Photo: Kanimozhi/Twitter)

தி.மு.க எம்.பி.யும் அந்தக் கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு கனிமொழி தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் பிரசாரத்தை பாதியில் விட்டுவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு இன்று (சனிக்கிழமை) தொண்டை கரகரப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தேர்தல் பரப்புரையின்போது கனிமொழியுடன் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.