மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியமை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
பாஜக அரசின் தூண்டுதலால் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சோதனை நடைபெறுவதாக திமுக புகார் அளித்துள்ளது.
ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது .
இவர்களுக்குச் சொந்தமான 25 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுகிறது.
அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை திடீரென நடைபெறுகிறது.
இந்நிலையில் பாஜக வருமானவரித்துறையை திமுகவினர் மீது ஏவிவிட்டுள்ளதாகவும், இது அரசாங்கத்தின் தப்புக்கணக்கு எனவும் கழகப் பொதுச் செயலாளர் திரு.துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
"தேர்தல் நேரத்தில் திமுகவினர் மீது வருமானவரித்துறையை ஏவிவிட்டிருப்பது பாஜக அரசு போடும் தப்புக்கணக்கு"
– கழக பொதுச்செயலாளர் திரு. @katpadidmk MLA அவர்கள் பேட்டி.#DMK #TNElections2021 pic.twitter.com/MVVqX7eL0l
— DMK (@arivalayam) April 2, 2021