November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் ரஜினிக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

51 ஆவது தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதாக இது கருதப்படுகின்றது.

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழ் திரையுலகில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமக்கு இந்தியத் திரையுலகின் மிக உயரிய ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கியமைக்காக நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை வருமாறு,

 

இதேவேளை, ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதன்போது “தங்களது நடிப்புத்திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம்” என ரஜினிக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

 

இதேவேளை, திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது நூறு வீதம் பொருத்தம் என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.