April 16, 2025 19:23:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த விஜயகாந்த் வீடு திரும்பினார்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்தும் அவரது மனைவியும் வீடு திரும்பியுள்ளனர்.

செப்டம்பர் 22 ஆம் திகதி வழக்கமான பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு சென்றிருந்த போது, விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, மருத்துவமனையில் விஜயகாந்தை உடனிருந்து கவனித்து வந்த அவரின் மனைவி பிரேமலதாவுக்கும் சில நாட்களின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த விஜயகாந்தும் பிரேமலதாவும் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.