தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி உண்மையான அன்பு வைத்திருந்தால்,இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கக் கூடாது என தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இலங்கைத் தமிழர்களை வேறாகத்தான் இவர்கள் பார்க்கிறார்கள்.அது அவர்களுக்கு புரியும்போது புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்,
தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனை என்பது ஒரு மிரட்டல் உத்தியாகத்தான் இருக்கும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன்,
நியாயமான முறையில் வருமான வரித்துறை சோதனை நடக்க வேண்டும் என்றும்.
பணப்பட்டுவாடா நடந்துகொண்டுதான் இருக்கிறது.இது மத்திய அரசின் மிரட்டல் போக்காகத்தான் இருக்கிறது.
தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி உண்மையான அன்பு வைத்திருந்தால்,இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கக் கூடாது.இலங்கைத் தமிழர்களை வேறாகத்தான் இவர்கள் பார்க்கிறார்கள்.அது அவர்களுக்கு புரியும்போது புரியும்.
அத்துடன் மக்கள் நீதி மய்யம் ஒரு சூப்பர் நோட்டா என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஜனநாயக நாட்டில் யாரும் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், சிந்தித்து பேசுவது சிறந்தது என கூறியுள்ளார்.
உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல எனக் கூறியுள்ள கமல்ஹாசன்,தமது கட்சிக்கு அமோகமாக வரவேற்பு இருப்பதாகவும்,கடிகார முள்ளுக்கு போட்டியாக சென்று கொண்டிருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.