மத்திய அரசுக்கு துணை போகும் அ.தி.மு.க அரசுக்கு முடிவு கட்டுவோம் என தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் தி.மு.க வேட்பாளர் எம்.மணிமாறனை ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க ஆட்சியில் சொன்ன திட்டங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவார்.
மத்திய அரசுக்கு ஆமாம்போடும் அரசாக அ.தி.மு.க உள்ளது.
இங்கு நடைபெறுவது அ.தி.மு.க ஆட்சியல்ல,பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி.தமிழ்க் கலாசாரத்தை மொத்தமாக டெல்லியில் கொண்டுபோய் அடகு வைத்துவிட்டார்கள்.
இந்த ஆட்சியில் பெண்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.மாணவர்கள் வாழ்வில் வளம் பெற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கனிமொழி இதன்போது வலியுறுத்தினார்.