January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான் மெதுவாக வருவேன், ஆனால் பொதுவாக வருவேன்; சீமான்

பெரிய கட்சிக்காரர்கள் 56 கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள்.ஆனால் நான் காட்டுக்குள் திரியும் புலி போன்று சிங்கிளாக வருவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

10 , 20 சீட்டுகளுக்காக என் தம்பி, தங்கைகளை கூட்டணிக்காக அடமானம் வைக்க மாட்டேன்.கொள்கைக்காக தன்மானம் காப்பேன் என சீமான் கூறியுள்ளார்.

நான் மெதுவாக வருவேன்.ஆனால் பொதுவாக வருவேன் என்று சீமான் ஆவடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருக்கிறார் .

சமூக மாற்றத்தைக் ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டு கேவலப்படுத்தக்கூடாது.

அனைவரும் ஓட்டுப்போட வேண்டும்.யாருக்காவது ஓட்டு போடுங்கள், ஒட்டு போடவில்லையென்றால் அது தேச துரோகம் எனக் கூறியுள்ளார் .

பெரிய புரட்சிகர சிந்தனையாளர்கள் மாதிரி, சமூக மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்று கூறி நோட்டாவிற்கு ஓட்டுப்போட்டு கேவலப்படுத்தக்கூடாது.

அ.தி.மு.க அல்லது தி.மு.க.வு.டன் கூட்டணி வைத்தால் ,வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோரை கரைத்தது போல் என்னையும் கரைத்து விடுவார்கள் எனவும் சீமான் தெரிவித்திருக்கிறார்.