July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய சட்டமன்றத் தேர்தல்; மேற்கு வங்கம், அசாமில் முதற்கட்ட வாக்குப்பதிவு

photo: Twitter/ Dr Jitendra Singh

இந்திய மேற்கு வங்கம் மற்றும் அசாமில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் 47 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதற்கட்ட வாக்குபதிவு இடம்பெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் புரூலியா, ஜார்கிராம், பங்குரா, கிழக்கு மேதினிப்பூர், மேற்கு மேதிப்பூர் மாவட்டங்களில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை 8 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

அதேவேளை, அசாம் சட்டப்பேரவைக்கு 3 சட்டங்களாக தேர்தல் இடம்பெறுகிறது. முதற்கட்டமாக நாகான், திப்ரூகர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வாக்குப்பதிவு இடம்பெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்தே வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுடன், வாக்காளர்கள் வரிசையாக ஆர்வமுடன் வாக்குப்பதிவு செய்து வருகின்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை மேற்கு வங்கத்தில் 40.73 சதவீத வாக்குகளும், அசாமில் 37.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருவதுடன் வாக்குப்பதிவு செய்யும் நேரம், 1 மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.